கிளிநொச்சியில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம்!

#SriLanka #Kilinochchi #Lanka4 #Tamilnews
Thamilini
2 years ago
கிளிநொச்சியில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம்!

நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊடாக  உணவுப் பாதுகாப்பினை உறுதிப்பத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம் இன்று (19.11) கிளிநொச்சியில் ஆரம்பமானது. 

தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது,  தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் கெ.சங்கீதன் தலைமையில் ஆரம்பமானது.  

images/content-image/1700393702.jpg

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில்,  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்,  வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்,  கரைச்சி பிரதேச செயலாளர்,  ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

நாடளாவிய ரீதியில் இத்திட்டத்திற்காக 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம் நிகழ்வான இன்று 2 லட்சம் மீன் குஞ்சுகள் 5 தொட்டிகளில் விடப்பட்டுள்ளதுடன், ஏனைய 25 தொட்டிகளிலும் வைப்பிட விரைவில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4