துலா ராசியினருக்கு மாற்று இனத்தவரால் எதிர்பார்ப்பு நிறைவேறும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
துலா ராசியினருக்கு மாற்று இனத்தவரால் எதிர்பார்ப்பு நிறைவேறும் - ராசிபலன்

மேஷம்: 

அசுவினி: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு விவகாரம் இன்று முடிவிற்கு வரும். பரணி: உங்கள் ஆலோசனையால் உயர்ந்த ஒருவர் உங்களைத்தேடி வருவார். எதிர்பாராத வருமானம் வந்து சேரும். கார்த்திகை 1: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: புதிய வாய்ப்பு ஒன்று உங்களைத் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். ரோகிணி: வியாபாரம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். மிருகசீரிடம் 1,2: உயர் நிலையில் உள்ளவரின் உதவியுடன் உங்கள் முயற்சி ஒன்றில் வெற்றி பெறுவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வருமானத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள். செயல்களில் இருந்த தடைகள் விலகும். திருவாதிரை: வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். புனர்பூசம் 1,2,3: காலை வரை உங்கள் முயற்சிகள் இழுபறியாகும். அதன்பின் நெருக்கடி விலகும்.

கடகம்

புனர்பூசம் 4: காலையில் உங்கள் செயல் லாபமாகும். அதன்பின் அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும். பூசம்: பயணத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் உங்கள் ரகசியங்களை வெளியிட வேண்டாம். ஆயில்யம்: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

சிம்மம்

மகம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். வியாபாரிகள் எண்ணம் நிறைவேறும். பூரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி வெற்றியாகும். உத்திரம் 1: குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வழக்கமான செயலில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உறவினருக்கு ஏற்பட்ட பிரச்னையை முன் நின்று தீர்த்து வைப்பீர்கள். சொத்து விவகாரம் சாதகமாகும். அஸ்தம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். செயல்களில் உண்டான தடைகள் விலகும். சித்திரை 1,2: அரசு வழி முயற்சியில் ஆதாயம் உண்டாகும். பொதுநலனில் அக்கறை கொள்வீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேலை நாட்டு தொடர்பு ஒன்றால் நன்மை ஏற்படும். சுவாதி: அலைச்சல் கூடினாலும் முயற்சியில் வெற்றி உண்டாகும். சொத்து விவகாரத்தில் சாதகமான நிலை எற்படும். விசாகம் 1,2,3: மாற்று இனத்தவரால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: அலைச்சல் அதிகரித்தாலும் எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். நட்பால் மகிழ்ச்சி உண்டாகும். அனுஷம்: வேலைகளில் டென்ஷன் அதிகரிக்கும். தாய் வழி உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கேட்டை: உறவினர் உங்கள் உதவியை தேடி வருவார்கள். அரசு வழியிலான செயல்களில் ஆதாய நிலை உண்டாகும்.

தனுசு

மூலம்: நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பூராடம்: உறவினர்கள் வழியே நலம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நிதிநிலை உயரும். உத்திராடம் 1: வேலைத்தேடி வந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். தடைகளைத் தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர்கள். திருவோணம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். கடன்களை அடைப்பீர்கள். அவிட்டம் 1,2: நண்பர்கள் உதவியுடன் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வீர்கள். பிரச்னைகள் விலகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: சங்கடங்கள் விலகும். நீங்கள் ஈடுபடும் முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்கள். சதயம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். கடந்த கால அனுபவங்களைக் கொண்டு வளர்ச்சிக்கு வழி காண்பீர்கள். பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர்கள். பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.

மீனம்

பூரட்டாதி 4: செயல்களில் நெருக்கடி உண்டாகும். வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை. உத்திரட்டாதி: தேவையில்லாத பிரச்னைகள் தேடிவரும். உடன் பணிபுரிபவர்களுடன் மனக்கசப்பு உண்டாகும். ரேவதி: உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். மனதில் குழப்பம் உண்டாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!