கனடாவின் கியூபெக் மாகாணத்தில் தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுப்பு

#Canada #Protest #Lanka4 #தொழில் #ஆர்ப்பாட்டம் #லங்கா4 #Canada Tamil News #Tamil News
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுப்பு

கியூபெக் மாகாணத்தில் தொழிற்சங்கப் போராட்டங்கள் சில முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கியூபெக் மாகாணத்தின் பொதுத்துறைசார் ஊழியர்களினால் இந்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 இந்தப் போராட்டங்களினால் பாடசாலைகள், சுகாதாரத்துறை மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் தொழிற்சங்கப் போராட்டத்தினால் பாதிக்கப்படக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறைகளை பிரதிநிதித்துவம் செய்யும் பல்வேறு துறைசார் பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.

images/content-image/1700553239.jpg

 எதிர்வரும் 21, 22 மற்றும் 23;ம் திகதிகளில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கூட்டு உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என குபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட் தொழிற்சங்கங்களிடம் அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!