சுவிட்சர்லாந்தின் பாசல் பகுதியில் சட்டவிரோத கஞ்சா செய்கை கண்டுபிடிப்பு
#Police
#Switzerland
#swissnews
#Lanka4
#சுவிஸ் செய்தி
#சுவிட்சர்லாந்து
#பொலிஸ்
#லங்கா4
#Cannabis
#Tamil News
#Swiss Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
சுவிட்சர்லாந்தின் Basel Land பகுதியில் உள்ள பொலிசார் Muttenz இல் சட்டவிரோத கஞ்சா தோட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். 3,500க்கும் மேற்பட்ட செடிகள் கைப்பற்றப்பட்டதுடன், 42 வயதான சுவிஸ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொழில்துறை கட்டிடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சட்டவிரோத தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டதாக மாநில பொலிஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு பல லட்சம் பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.