பிரான்ஸில் இக்குளிர்காலத்திற்கான பனிப்பொழிவு இவ்வாரம் பதிவாகும்
#France
#weather
#Lanka4
#லங்கா4
#குளிர்
#Snow
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

இந்த குளிர்காலத்தின் முதலாவது பனிப்பொழிவு இவ்வாரத்தில் பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு நாட்டின் பெரும் பகுதிகளில் கடும் குளிர் உணரக்கூடியதாக இருந்தது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை Belfort நகரில் 10 ° C குளிரும், Gap நகரில் 6 ° C குளிரும் பதிவானது. இந்நிலையில், வியாழக்கிழமை இந்த பருவகாலத்தின் முதலாவது கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிசில் 6°C குளிரும், இல் து பிரான்சின் பிற மாவட்டங்களில் 1°C குளிரும் பதிவாகும் எனவும் Météo France அறிவித்துள்ளது.



