கன்னி ராசியினர் உடல்நலம் குறித்து கவலைகொள்ள வேண்டும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
5 months ago
கன்னி ராசியினர் உடல்நலம் குறித்து கவலைகொள்ள வேண்டும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மதியம் வரை லாபமாகும். அதன் பின் செயல்களில் சங்கடம் உண்டாகும். பரணி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி காலையில் வந்து சேரும். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். கார்த்திகை 1: பொருளாதார நிலை சீராகும். நண்பர்கள் உதவியால் சங்கடம் நீங்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நெருக்கடி நீங்கும். ரோகிணி: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். புதிய முயற்சி பலிதமாகும். நிதிநிலை உயரும். மிருகசீரிடம் 1, 2: உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பெரியோர் ஆதரவுடன் திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றுவீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். திருவாதிரை: பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள். வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வந்து சேர்வார்கள். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: நேற்றைய சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். பூசம்: உங்கள் செயல்களில் இருந்த தடைகள் விலகும். உறவுகளால் ஆதாயம் அதிகரிக்கும். ஆயில்யம்: மறைமுக எதிர்ப்புகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

சிம்மம்

மகம்: மதியம் வரை உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும் அதன்பின் செயல்களில் சங்கடம் உண்டாகும். பூரம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உத்திரம் 1: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். முதலீட்டில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உடல் நிலையில் உண்டான பாதிப்பு விலகும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். அஸ்தம்: வியாபாரத்தில் உண்டான சங்கடம் நீங்கும். புதிய வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: ஆரோக்கியம் சீராகும். எதிரிகளின் தொல்லை விலகும். உங்கள் கனவுகள் நிறைவேறும்.

துலாம்:

சித்திரை 3,4: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். சுவாதி: வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும். சேமிப்பு உயரும். விசாகம் 1,2,3: சொத்துப் பிரச்னை ஒன்றில் பேசி தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். அனுஷம்: வேலை பளு கூடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். கேட்டை: தேவையற்ற சங்கடங்கள் உங்களைத் தேடி வரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு

மூலம்: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சங்கடங்கள் நீங்கும். பூராடம்: உங்கள் செயலில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களுடன் இணைந்து ஒரு முயற்சியை மேற்கொள்வீர்கள். உத்திராடம் 1: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வந்து சேரும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மதியத்திற்கு மேல் உங்கள் முயற்சி வெற்றியாகும். திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். வருவாயில் இருந்த தடைகள் நீங்கும். செயல்கள் எளிதாக நிறைவேறும். அவிட்டம் 1,2: பணத் தேவை நிறைவேறும், குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: மனதில் குழப்பம் இருக்கும். முயற்சிக்கேற்ற பலன் இல்லை என்ற எண்ணம் மேலோங்கும். சதயம்: திடீர் வரவால் உங்களது தேவைகள் பூர்த்தியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: காலையில் இருந்த நெருக்கடி மதியத்திற்கு மேல் விலகும். எதிர்பார்த்த வரவால் சங்கடம் நீங்கும்.

மீனம்

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் இழுபறியாகும் என்றாலும் மதியத்திற்கு மேல் நிலை மாறும். உத்திரட்டாதி: அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். ரேவதி: நெருக்கடிகள் தீரும். இயந்திரத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் லாபம் அதிகரிக்கும்.