வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீழ்ந்து 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை கைப்பற்றியுள்ளதுடன், விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். 

குறித்த இளைஞர்  தனது பெற்றோருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் என  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  

இளைஞரின் சடலம் அடுக்குமாடி குடியிருப்பின் பின் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4