மேஷ ராசியினருக்கு பணத் தட்டுப்பாடு உண்டாகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
5 months ago
மேஷ ராசியினருக்கு பணத் தட்டுப்பாடு உண்டாகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் போட்டியாளர்கள் உண்டாவார்கள். வரவு செலவில் சில சங்கடங்களை அடைவீர்கள். பரணி: பணத் தட்டுப்பாடு உண்டாகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் பிரச்னைகள் தோன்ற வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனம் தேவை.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் சேரும். ரோகிணி: அந்நியர்கள் மூலம் ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் உங்கள் முயற்சிகள் ஆதாயமாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி உண்டாகும். திருவாதிரை உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். பண வரவு மகிழ்ச்சி தரும்.

கடகம்

புனர்பூசம் 4: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து அதைப் பூர்த்தி செய்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பூசம்: தடைப்பட்ட வேலைகள் மீண்டும் நடைபெற ஆரம்பிக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஆயில்யம்: வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். மற்றவரின் மறைமுக சதிகளை முறியடிப்பீர்கள்.

சிம்மம்

மகம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். பூரம்: உங்கள் முயற்சிகள் தாமதமாகும். செயல்களில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். அலைச்சல் உண்டாகும். உத்திரம் 1: வேலை பளு அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்கள் உங்களை சங்கடப்படுத்தும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அஸ்தம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயல் நிறைவேறும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும். சித்திரை 1,2: உங்கள் திறமை வெளிப்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை விலகும்.

துலாம்

சித்திரை 3,4: போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்ப்புகளை முறியடித்து முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சுவாதி: சிந்தித்து செயல்படுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் நன்மை காண்பீர்கள். விசாகம் 1,2,3: பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு மதிப்பு உண்டாகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: மற்றவரை நம்பி ஒப்படைக்கும் வேலைகள் இழுபறியாகும். செயல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். அனுஷம்: தொழிலை விரிவு படுத்தும் முயற்சி நிறைவேறும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்டை: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள்.

தனுசு

மூலம்: உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள கடுமையாக உழைப்பீர்கள். எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள் பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர்கள். உத்திராடம் 1: திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டபடி செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்கள் செல்வாக்கு உயரும். திருவோணம்: பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதிய பொறுப்பு வந்து சேரும். பிறர் பாராட்டுவார்கள். அவிட்டம் 1,2: புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். யோசித்து முடிவெடுப்பது நன்மையாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: செயல்களில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சதயம்: சுறு சுறுப்புடன் செயல்பட்டு நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் லாபம் கூடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கடன்களை அடைப்பீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4: மனதில் தேவையற்ற குழப்பம் வந்து போகும். பணிகளில் விழிப்புணர்வு அவசியம். உத்திரட்டாதி: அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். செலவுகள் கட்டுக்குள் வரும். ரேவதி: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.