எந்தவித அச்சங்களுமின்றி மாவீரர் துயிலுமில்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தலாம்!

#SriLanka #Batticaloa #Tamil People #Ampara
Mayoorikka
2 years ago
எந்தவித அச்சங்களுமின்றி மாவீரர் துயிலுமில்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தலாம்!

மாவீரர் நாள் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் மட்டக்களப்பு மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் துப்பரவு செய்யப்பட்டு, சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். 

 கடந்த காலத்தில் நாம் மிகவும் இக்கட்டான சூழலிலும், பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், மாவீரர் நாளை அனுஷ்டித்து வந்தோம். இந்நிலையில் இவ்வருடம் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லாத சூழல் உள்ளது.

 எனினும் இம்முறை மாவீரர் நாளை அனுஷ்டிக்க பொலிஸார் தடையுத்தரவைப் பெறுவதற்கு முயற்சித்தபோதும், அதனை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

 எனவே இம்முறை மக்கள் அனைவரும் எந்தவித அச்சங்களுமின்றி எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 06.05மணிக்கு உங்களுக்குப் பக்கத்திலே அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்திற்குச் சென்று எமது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி ஆயுதியான மாவீரர்களை சுடர் ஏற்றி, கண்ணீர் வணக்கம் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு தமிழ் மகனினதும் கடமையாக இருக்கின்றது.

 எனவே, இந்நாளை ஒரு புனித நாளாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4