பரதநாட்டியம் சர்ச்சையில் சிக்கிய மௌலவி - பகிரங்க மன்னிப்புக் கோரிய உலமா!

#SriLanka #Colombo
PriyaRam
1 year ago
பரதநாட்டியம் சர்ச்சையில் சிக்கிய மௌலவி - பகிரங்க மன்னிப்புக் கோரிய உலமா!

மதம் மற்றும் கலாசார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்திற்குரியதுமாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.அர்கம் நூராமித் தெரிவித்தார்.

பரதநாட்டியம் தொடர்பில் மௌலவி ஒருவர் தவறாக பேசிய விடயம் தொடர்பில் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

images/content-image/2023/11/1700715439.jpg

இந்த விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு மாளிகாவத்தை ஜம்இய்யதுல் உலமா தலைமைக் காரியாலத்தில் நடைபெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முக்கியஸ்தர்கள், இந்துமத தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!