ஜாஎல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை பிடிக்க முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜாஎல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை பிடிக்க முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

ஜாஎல பிரதேசத்தில் கால்வாயில் விழுந்து தப்பிச் சென்ற நபர் ஒருவரை கைது செய்வதற்காக நீரில் இறங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சந்தேகநபரை கைது செய்ய பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று சென்ற போது அவர் கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், அவரை பிடிக்க 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கால்வாயில் குதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 அவர்களில் ஒருவரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறுகையில்,  அந்த ஓடை பற்றிய விவரம் தெரியாதமையால் குதிக்க வேண்டாம் எனக் கூறியதாகவும், இருப்பினும் சந்தேகநபர் கீழ் இறங்கிய நிலையில், பொலிஸாரும் அவரை பின்தொடர்ந்து இறங்கியதாகவும் தெரிவித்துள்ளார். 

இதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தார் மாயமாகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4