தமிழர்களிடையே அதிகரிக்கும் முறையற்ற புலம்பெயர்வும் இழக்கும் பணத் தொகையும்

#SriLanka #Refugee #economy #Foriegn #Diaspora
Mayoorikka
5 months ago
தமிழர்களிடையே அதிகரிக்கும் முறையற்ற புலம்பெயர்வும் இழக்கும் பணத் தொகையும்

யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்கள் முகம் கொடுத்து வருகின்ற பல்வேறு பொருளதாக சமூக சாவால்களினை அடுத்து யுத்ததினால் இன்னல்களுக்கு உள்ளாகிய தமிழர்கள் பல்வேறு வழிமுறைகளில் மேற்கத்தேய நாடுகளுக்கு புலம்பெயருகின்றனர்.

 புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் வடக்கு கிழக்கில் இருந்த புலம்பெயர்ந்தவர்கள் அந்தந்த சமூகத்தினரை அல்லது குடும்பத்தினரை அந்த நாட்டிற்கு அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகினறனர்.

 இதற்காக சிலர் முறையான வழிகளை தேர்ந்தெடுத்தாலும் பலர் முறையற்ற வழிமுறைகளையே நாடுகின்றனர். இதன்காரணமாக பலர் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர். 

அவர்களில் சிலர் அகதி அந்தஸ்து பெறாத காரணத்தினால் அவர்களில் அநேகமானோர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

 எவ்வாறாயினும் வெளிநாடுகளில் உள்ள நண்பர்களின் உறவினர்களின் வளர்ச்சி தொடர்பான கதைகளினாலும் பலர் உந்துதல்பட்டு முறை சாரா வழிமுறைகளின் ஊடாக கூட பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்தும் புலம்பெயர்கின்றனர்.

 முறைசாரா வழிமுறைகளின் ஊடாக புலம்பெயரும் போது அவர்களின் இலக்கு நாடுகளில் வசிப்பதற்கு அனுமதியை பெற்றுக் கொள்ளும் விடையத்தில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை மிகச் சிறிதாக இருப்பினும் இந்த விடையம் வெளியில் புலம்பெயர்வதற்கு எதிர்பார்த்து உள்ளவர்கள் ஆட்கடத்தல்காரர்களுக்கு பெரும்தொகையான பணத்தினை செலுத்தி அவர்களின் உதவியினை பெற்றுக்கொள்வதற்கு உந்துதலாக அமைகின்றது.

 முறைசாரா புலம்பெயர்வில் அநேகமானோர் ஆபத்து மிக்க பயணங்களின் ஊடாக பயணிப்பதினால் பெருந்தொகையானோர் பொருளாதாரத்தை அடையும் கனவினை நனவாக்கிக் கொள்ள முடிவதில்லை. 

images/content-image/2023/11/1700759182.jpg

 இலாபமடையும் நோக்கில் குற்றச் செயலில் ஈடுபடும் ஆட்கடத்தல்காரர்கள் கூறும் பொய்யான கதைகள் மீது நம்பிக்கை வைத்து நடுக்கடலில் உயிரைக் காப்பாற்றும் கப்பல்களினால் அழைத்துச் செல்லலாம் அல்லது காப்பாற்றப்படலாம் அல்லது இலக்கு நாடுகளின் குடிவரவில் மாற்றம் ஏற்படலாம் எனும் எதிர்பார்ப்பின் ஊடாக தங்களது எதிர்காலத்திற்கான அடிப்படையாக கொள்கின்றனர்.

 இவ்வாறு புலம்பெயர்பவர்களை ஆட்கடத்தல்காரர்கள் ஐரோப்பிய நாடுகளில் விடுவதாக கூறிவிட்டு அவர்களினை ஆபிரிக்க நாடுகளில் இடைநடுவில் கைவிட்டு விட்டு செல்கின்றனர். இதன்காரணமாக பலர் உயிரை விடும் அபாயத்திற்கும் தள்ளப்படுகின்றனர்.

 இவ்வாறான நிலையில் தாயகத்தில் இருந்து முறையான வழிகளில் புலம்பெயர்வு நடவடிக்கையில் ஈடுபட வேண்டி பல்வேறு வெளிநாட்டு அமைப்புக்களும் உள்நாட்டு அமைப்புக்களும் அறிவுறுத்தி வருகின்றன.

 இருந்தும் சிலர் பொருள் ஈட்டும் மற்றும் உயிரை பாதுகாக்கும் நோக்குடன் பெரும் தொகையான பணத்தினை ஆட்கடத்தல்காரர்களுக்கு வழங்கி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயல்கின்றனர். இதற்காக சிலர் போலி முகவர்களினை அணுகி இலட்சக்கணக்கான பணத் தொகையினை கொடுத்து ஏமாற்றமடைந்து உள்ளனர். 

images/content-image/2023/11/1700759281.jpg

இவ்வாறாக பல செய்திகள் அண்மையை நாட்களில் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் போலீசாரும் பல எச்சரிக்கைகளும் அறிவுறுத்தல்களை விடுத்த வண்ணமே உள்ளனர். 

அவ்வாறிருந்தும் போலி முகவர்களினுடாக பலர் பணத்தினைக் கொடுத்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதற்கு இன்னமும் முயற்சி செய்தவண்ணம் உள்ளனர்.

 எவ்வாறாயினும் ஆபத்தினை எதிர்நோக்கி முறையில்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்வதன் மூலம் அங்கு நிரந்தரவிசா கிடைப்பது என்பதும் அரிதாகவே காணப்படுகின்றது.

 இவ்வாறானதொரு சூழ்நிலையில் முறையாற்றவிதத்தில் ஆபத்தான கடல் பயணம் மற்றும் போலி முகவர்களினுடாக இவ்வாறு சொல்லவேண்டுமா என்பதையும் புலம்பெயரும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

 எனினும் அவ்வாறுதான் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டுமாக இருந்தால் முறையான வழியினுடாக வேலைவாய்ப்பு பணியகமூடாகவோ அல்லது பதிவு செய்யபப்ட்ட முகவர்களூடாகவோ வேலைவாய்ப்பிற்காகவோ அல்லது கல்விக்காகவோ செல்வது என்பது பயனுள்ளதாக அமைகின்றது.

 எனவே புலம்பெயர்நாடுகளுக்கு செல்ல எண்ணுவோர் சிந்தித்து முறையான வழியினுடாக பணத்தினை இழக்காமல் செல்வதற்குசிந்திக்க வேண்டும் என்பதே திண்ணம்.

 இருந்தும் இவ்வாறு தமிழர்களில் படித்த புத்திசாலிகளும் திறமையாளர்களும் பெரும்பாலானோர் நாட்டை விட்டு புலம்பெயர்ந்தால் தமிழர்கள், தமிழர்களுக்கான நிலங்கள் வேண்டும் ஒரு தனிநாடு வேண்டும் என போராடுவது அர்த்தமற்றதாக போய்விடும். 

பின்னர் தமிழர் தாயக நிலப்பரப்பு சிங்களவர்களின் கைகளுக்கு மாறும் அபாயமும் காணப்படுகின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து தமிழர்களுக்கு தீர்வு வேண்டும் சுதந்திரம் வேண்டும் என போராடுவதிலும் எந்தவொரு அர்த்தமும் இருக்காது என்பதையும் தமிழர்கள் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.