பிரான்ஸின் ஜுரா மாவட்டத்தில் ஜனாதிபதி மக்ரோன் சிறுவர்களுடன் மர நடுகையில் ஈடுபட்டார்
#France
#Lanka4
#President
#லங்கா4
#Plant
#பிரான்ஸ்
#Forest
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

Jura மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், சிறுவர்களுடன் அங்குள்ள Moirans-en-Montagne காட்டில் உலாவும் காட்சிகள் புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.
பிரான்சில் மீண்டும் மிகப்பெரும் காடுகளை உருவாக்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி மக்ரோன் அறிமுகப்படுத்தியுள்ளார். ஒரு இளம் பிள்ளை ஒரு மரம் நடவேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக "Un jeune, un arbre" என பெயரிடப்பட்ட திட்டம் ஒன்றினை இன்று வெள்ளிக்கிழமை அவர் ஆரம்பித்து வைத்தார்.
சிறுவர்கள் பலரை மரக்கண்டுகள் நட வைத்தார். அவருடன் 50 வரையான மாணவர்கள் உடனிருந்தனர்.
அடுத்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரு பில்லியன் மரங்கள் நடுவதே இந்த "Un jeune, un arbre" திட்டமாகும். இதனை ஜனாதிபதி மக்ரோன் கடந்த செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.



