பல்கலைக்கழக விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் மரணம்
#India
#Death
#students
#Kerala
#Crowd
#University
#Music
Prasu
1 year ago

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.
இங்கு நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. மேலும், மாணவர்கள் அல்லாதோரும் ஏராளமானோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில், அரங்கிற்கு வெளியேயும் அதிக அளவிலானோர் நின்று கொண்டிருந்தனர். திடீரென மழை பெய்ததால் அரங்கத்திற்கு வெளியே இருந்தவர்கள், உள்ளே நுழைந்ததால் கூட்ட நெரிசலால் விபத்து ஏற்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



