சிம்ம ராசியினருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
5 months ago
சிம்ம ராசியினருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் முயற்சிகள் இன்று பலன் தரும். சிலர் கோயில் வழிபாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பீர்கள். பரணி: எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். பணியில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்துவது நன்மையாகும். கார்த்திகை 1: செயல்களில் தடுமாற்றங்கள் உண்டாகும். மறைமுகத் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: திடீர் செலவுகளால் சங்கடம் உண்டாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். ரோகிணி: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்கள் முயற்சியில் இழுபறி உண்டாகும். மிருகசீரிடம் 1,2: வர வேண்டிய பணம் வராமல் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். பூசம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். லாபம் அதிகரிக்கும். ஆயில்யம்: கடவுள் வழிபாட்டில் மனம் செல்லும். வருவாய் அதிகரிக்கும். புதிய முயற்சி நன்மையாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள். திருவாதிரை: புதிய முயற்சி ஒன்று வெற்றியாகும். வராமல் இருந்த பணம் வந்து சேரும். புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பண விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும்.

சிம்மம்

மகம்: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெரியோர் ஆதரவுடன் உங்கள் செயல் லாபமாகும். பூரம்: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும். உத்திரம் 1: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு முடிவு காண்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். அஸ்தம்: உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றும். சித்திரை 1,2: செயல்களில் இடையூறுகளை சந்திப்பீர்கள். வரவு இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பநிலை ஏற்படும்.

துலாம்

சித்திரை 3,4: நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். இரவு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம். சுவாதி: உங்கள் திறமைகள் வெளிப்படும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்திணைவார்கள். விசாகம் 1,2,3: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரப் போட்டியாளர்கள் விலகுவார்கள். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். அனுஷம்: உங்களின் செல்வாக்கு உயரும். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். கேட்டை: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். 

தனுசு

மூலம்: உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். உத்திராடம் 1: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள். 

மகரம்

உத்திராடம் 2,3,4: தொழிலை விரிவு செய்வது குறித்து யோசிப்பீர்கள். நட்புகளால் நெருக்கடி விலகும். திருவோணம்: உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்ப்பை அடைவீர்கள். அவிட்டம் 1,2: நீங்கள் ஈடுபடும் முயற்சி ஒன்று இழுபறிக்குப்பின் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். சதயம்: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வருமானத்தால் மகிழ்ச்சி கூடும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். பூரட்டாதி 1,2,3: ஒப்புக்கொண்ட வேலைகளை முடித்துக் கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். 

மீனம்

பூரட்டாதி 4: பண வரவில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உத்திரட்டாதி: முன்னோரை மனதில் எண்ணி வேண்டிக் கொள்வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும். ரேவதி: வருமானத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.