எந்த தடைகள் வந்தாலும் நவம்பர் 27 உறவுகள் நாளினை நினைவு கூறுவோம் : துரைராசா ரவிகரன்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
எந்த  தடைகள் வந்தாலும் நவம்பர் 27 உறவுகள் நாளினை நினைவு கூறுவோம் : துரைராசா ரவிகரன்!

எந்த  தடைகள் வந்தாலும் நவம்பர் 27 உறவுகள் இறந்த நாளினை நினைவு கூறுவோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். 

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முல்லைத்தீவு பொலிஸாரால் தடையுத்தரவை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார், 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  கொடிகளை அகற்றுமாறும், அலங்கார வேலைகள் இருக்க கூடாதென்றும், பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது என விரட்டியதாக எனக்கு தகவல் தெரிவித்திருந்தார்கள். 

இதேபோல் தேவிபுரம், முள்ளிவாய்க்கால், அளம்பில், முள்ளியவளை போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் இவ்வாறான இடம்பெற்றிருந்ததாக அறியத்தந்திருந்தார்கள். 

இருப்பினும் மக்கள் சில விடயங்களை கதைத்து முடிவு எடுத்திருக்கின்றார்கள். அளம்பில் துயிலும் இல்லத்தில் வைத்து எனக்குரிய தடையுத்தரவை வழங்கியிருக்கிறார்கள். 

எவ்வளவு தடைகள், உத்தரவுகளை தந்தாலும் நவம்பர் 27 உறவுகள் இறந்த நாளினை நினைவுகூர்ந்து நடத்துவோம். 

மஞ்சள் , சிவப்பு கொடி என்பது விடுதலைப்புலிகளது கொடி அல்ல. நிதிமன்ற கட்டளைகளை மதிக்கின்றோம். அக்கட்டளைகளை மதித்து நாம் உறவுகளை நினைவு கூருவோம் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4