இன்றைய நாளில் சுய ஆற்றலை வெளிப்படுத்தும் ரிஷப ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
5 months ago
இன்றைய நாளில் சுய ஆற்றலை வெளிப்படுத்தும் ரிஷப ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றைய குழப்பங்கள் விலகும். வழக்கத்தை விட இன்று கவனமுடன் செயல்படுவீர்கள். பரணி: குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். 

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் விருப்பம்போல் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். ரோகிணி: வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மிருகசீரிடம் 1,2: உங்கள் சுய ஆற்றல் வெளிப்படும். சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பயணத்தில் கவனம் தேவை. திருவாதிரை: திடீர் பயணம் உண்டாகும். குடும்பத்தினர் ஆசையை நிறைவேற்றுவீர்கள். புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். பண விவகாரத்தில் கவனம் தேவை. 

கடகம்

புனர்பூசம் 4: வருமானத்தில் இருந்த தடை விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூசம்: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலையில் இருந்த தடைகள் விலகும். ஆயில்யம்: புதிய நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். 

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பூரம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். நிதிநிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். உத்திரம் 1: தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. 

கன்னி

உத்திரம் 2,3,4: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அஸ்தம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். தந்தை வழி உறவுகளால் உங்கள் சங்கடம் தீரும். சித்திரை 1,2: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கு இன்று உங்களுக்கு சாதகமாகும். 

துலாம்

சித்திரை 3,4: ஆவலுடன் நீங்கள் ஈடுபட்ட முயற்சி இழுபறியாகும். பயணத்தில் சங்கடங்கள் உண்டாகும். சுவாதி: செயல்களில் இழுபறி உண்டாகும். யோசித்து செயல்படுவதால் சங்கடங்கள் போகும். விசாகம் 1,2,3: உங்கள் முயற்சியின் காரணமாக எதிர்பார்த்ததை அடைவீர்கள். செலவிற்கேற்ற வரவு வரும். 

விருச்சிகம்

விசாகம் 4: நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். அனுஷம்: வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கேட்டை: கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகள் நீங்கும். உங்களது ஆலோசனையை நண்பர்கள் ஏற்பார்கள். 

தனுசு

மூலம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும், உங்கள் திறமை வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும். பூராடம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்களிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: பகைவர்கள் விலகிச் செல்வார்கள். வருமானம் மகிழ்ச்சி தரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: குடும்பத்தினர் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சேமிப்பில் கவனம் செல்லும். திருவோணம்: குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உறவுகளிடம் சுமூகமான நிலை உண்டாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர்கள். சதயம்: எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். கவனக்குறைவால் மேலதிகாரிக்கு பதில் சொல்ல வேண்டி வரும். பூரட்டாதி 1,2,3: அந்நியர்களால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். சிலர் வீண் பழிக்கு ஆளாவீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உத்திரட்டாதி: அலுவலகப் பிரச்னை முடிவிற்கு வரும். உடன் பணி புரிபவர்களால் உங்கள் முயற்சி வெற்றியாகும். ரேவதி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். அந்நிய மனிதர்களிடம் எச்சரிக்கை அவசியம்.