ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீனாவிற்கு வழங்குவதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்பிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீனாவிற்கு வழங்குவதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்பிப்பு!

ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீன அரசாங்கத்திற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் நிர்மாணிப்பது தொடர்பான யோசனை இன்று (27.11) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  

அமைச்சரவையின் பிரேரணைக்கு அனுமதி கிடைத்ததன் பின்னர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.  

ஹம்பாந்தோட்டையில் சினோபெக் கம்பனியால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை நாளை (28.11) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4