வீட்டில் நல்ல வளமும் சிறந்த நலமும் கிடைக்க வலம்புரி சங்கினை வைத்திருங்கள்
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்த்ததினை எடுத்த போது கிடைக்கப்பட்ட பொருட்களில் ஒன்று தான் சங்கு என்பது வரலாறு. இது ஒரு மங்கலப்பொருளாக கருதப்படுவதனால் இதனை வீட்டில் வைத்திருப்பது யோகத்தைத் தரும். இந்த சங்கானது நான்கு வகையாக பிரிக்கப்படும்.
முதல்வகை
இடம்புரிச் சங்கு. இது, ஆயிரம் சிப்பிகள் கூடும் இடத்தில் கிடைக்கும்.
இரண்டாம் வகை
‘வலம்புரி’. ஆயிரம் இடம்புரி சங்குகள் கூடும் இடத்தில் இது கிடைக்கும். வலம்புரிச்சங்குதான் கோயில் பூஜைகளில் முதன்மை பெறுகிறது.
மூன்றாவது வகை
‘சலஞ்சலம்’ சங்கு. ஆயிரம் வலம்புரிகள் சங்கு கூடும் இடத்தில் ஒரு சலஞ்சலம் சங்கு கிடைக்கும். இது, அபூர்வ வகை.
நான்காவது வகை
‘பாஞ்சஜன்யம்’. இது, ஆயிரம் சலஞ்சலங்கள் கூடும் இடத்தில் கிடைக்கும். வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது மகாலட்சுமிக்கு ஈடானது. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றியவளே எனவேதான் வலம்புரிச் சங்கு “லக்ஷ்மி சகோதராய” என்று அழைக்கப் படுகிறது.
ஸ்ரீ மஹாவிஷ்ணு வலம்புரிச் சங்கை தனது கரத்திலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயை தனது மார்பிலும் தாங்கியபடி காட்சி அளிக்கிறார். மிகப் புனிதமான சங்குகள் வளத்தையும், நலத்தையும் தருவதாக கருதப்படுகிறது. இந்த நம்பிக்கைகளின் காரணமாக வலம்புரிச் சங்குகளைப் பெருந்தொகை அளித்து வாங்குபவர் உள்ளனர்.
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமையான சோமவாரத்தில் 108 சங்கு வைத்து பூஜை செய்வார்கள் அதில் வலம்புரி சங்குதான் நடுநாயகமாக இடம்பெறும். வலம்புரி சங்கில் பூஜை செய்தால் தோஷங்கள் இருப்பின் அகன்று விடும். வலம்புரிச் சங்கிலிருந்து விலையுயர்ந்த முத்து கிடைக்கும் என்ற நம்பிக்கை சங்க காலத்திலிருந்தே உள்ளது.
வலம்புரி சங்கை வாங்கும்போது நன்கு தெரிந்த ஆன்மிக பெரியவர்களை வைத்துதான் வாங்க வேண்டும்.