கனடாவின் ரொறன்ரோவில் இடம் பெற்ற விபத்தொன்றில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்

#Canada #Accident #Lanka4 #விபத்து #லங்கா4 #Canada Tamil News #Tamil News
கனடாவின் ரொறன்ரோவில் இடம் பெற்ற விபத்தொன்றில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு பதின்ம வயது உடையவர்களும் ஒரு பெண்ணும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

 இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஹிடன்வெளி பகுதியின் 60-ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 15 முதல் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் நோர்த் யோர்க் மற்றும் ரிச்மண்டில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

images/content-image/1701086513.jpg

 சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

 இந்த விபத்து காரணமாக அறுபதாம் இலக்க அதிவேக நெடுஞ்சாலை சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கத. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4