இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

#SriLanka #Jaffna #Death
Mayoorikka
2 years ago
இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நியூமோனியா ஏற்பட்டு குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.

 யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா என்ற 25 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ளார்.

 குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளார்.

 சிசுக்களை சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலமே பிரசவித்தார் என தெரிவிக்கப்படுகிறது. குழந்தைகள் பிறந்து ஒரு சில நாட்களில் தாய்க்கு அம்மை வருத்தம் ஏற்பட்டுள்ளது. 

அந்த தொற்று பரவும் என கருதிய வைத்தியர்கள் அப்​பெண்ணை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர்.

 தாயும் குழந்தைகளும் வீடு திரும்பிய நிலையில் தாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

 அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (27)உயிரிழந்துள்ளார்.

 உடற்கூற்று பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நியூமோனியா ஏற்பட்டு நுரையீரலை பாதித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. 

உடலின் சில பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4