கற்பழிப்பு வழக்கில் மரணதண்டனை கைதிகளான இரு இராணுவத்தினர் விடுதலை

#SriLanka #Colombo #Jaffna #Arrest #Murder #Court Order #Sexual Abuse #Lanka4 #Soldiers #Sri Lankan Army #Tamilnews #sri lanka tamil news #Freed #Rape
Prasu
1 year ago
கற்பழிப்பு வழக்கில் மரணதண்டனை கைதிகளான  இரு இராணுவத்தினர் விடுதலை

யாழ்ப்பாணத்தில் கூட்டு பலாத்காரத்தின் பின் கொலை செய்யப்பட்டரஜினி வேலாயுதம்பிள்ளை என்ற 24 வயது இளம் பெண் தொடர்பான வழக்கின் குற்றவாளிகளான இராணுவத்தினரை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு இருக்கின்றது. 

1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி கோண்டாவில் இராணுவ சாவடியில் இந்த பெண்ணை கடத்திய இராணுவத்தினர் கோரமான பலாத்காரத்தின் பின் வீடொன்றின் மலக்குழிக்குள் கொன்று வீசி இருந்தனர்.

வெளிநாடு செல்வதற்கு முதல் நாள் மானிப்பாயிலிருந்த சிறிய தாயாரிடம் பிரியாவிடை பெறுவதற்காக சென்று கொண்டு இருந்த போத ரஜினி கடத்தப்பட்டு இருந்தார் மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவின் கட்டுப்பாட்டிலிருந்த போது நடந்த மேற்படிசம்பவம் தொடர்பாக பல்வேறு மட்டங்களில் எழுந்த கடுமையான அழுத்தங்களையடுத்து 6 இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

images/content-image/1701294795.jpg

ஆனால் கைது செய்யப்பட்டிருந்த இராணுவத்தினருக்கு பாதுகாப்பில்லை என வழக்கை கொழும்புக்கு மாற்றி இருந்தார்கள் பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர் 2001ஆம் ஆண்டு சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஜூரியின் உடன்பாட்டின் மூலம் மூன்று இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரண்டு இராணுவ அதிகாரிகளை குற்றமற்றற்றவர்கள் என விடுதலை செய்து இருக்கின்றார்கள்.

மற்றைய இராணுவ அதிகாரிக்கு எதிராக மீள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கின்றார்கள். எனவே அவரும் விரைவில் விடுதலை செய்ய பட போகின்றார் 

images/content-image/1701294809.jpg

கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலிருந்த போது மிருசுவில் கொலை வழக்க்கில் தண்டிக்கப்பட்ட மரண தண்டனை குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கி இருந்தார் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தில் கோண்டாவில் கொலை வழக்கு குற்றவாளிகளை நீதிமன்றத்தின் மூலம் விடுதலை செய்து இருக்கின்றார்கள்.

கிரிமினல் குற்றவாளிகள் விடுவிக்கபடும் இந்த நாட்டில் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட நினைவேந்தல்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றார்கள்.

அப்பாவி சிறு குழந்தைகள் மீது அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் காரணமாக விசாரணை என்கிற பெயரில் அச்சுறுத்தல்களை-வன்முறைகளை ஏவி விடுகின்றார்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!