வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள 35 இலங்கையர்கள்!
#SriLanka
#Dubai
#Visa
#Kuwait
Mayoorikka
1 year ago

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, வீசா இன்றி குவைத்திற்கு வேலைக்குச் சென்று தங்கியிருந்த 33 வீட்டுப் பணியாளர்களும் இரண்டு வீட்டுப் பணியாளர்களும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கும் அந்நாட்டு உள்துறை அமைச்சகத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட குழுவினர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



