மாவீரர் நாள் நினைவேந்தலில் விடுதலைப் புலிகளின் ஆடை அணிந்து சென்ற இளைஞனுக்கு விளக்க மறியல்!

மாவீரர் நாள் நினைவேந்தலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து பங்கேற்ற இளைஞரை டிசம்பர் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் நேற்று கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடுப்பு விதிகளின் கீழும் குறித்த இளைஞன் மீது பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.



