பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள கர்தினால்!

#India #SriLanka #Malcolm Ranjith #Easter Sunday Attack
PriyaRam
1 year ago
பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள கர்தினால்!

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயல் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் எவற்றையும் கருத்திற்கொள்ளாமல் அவருக்கு நியமனம் வழங்கியமையின் ஊடாக மக்களின் பாதுகாப்பின் மீது ஜனாதிபதிக்கு அக்கறை இல்லை என்பதே புலப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/2023/11/1701318160.jpg

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதை தடுக்க வாய்ப்புக்கள் காணப்பட்ட போதும் அதனை உதாசீனம் செய்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குற்றச் சட்டைபோட்டவரே தேசபந்து தென்னகோன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் தேசபந்து தென்னகோன் போன்றோர் நாட்டின் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை மிலேச்சத்தனமான செயற்பாடு என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!