விளையாட்டுத்துறை தொடர்பில் ஹரினின் புதிய திட்டமிடல்!

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சை உலக வர்த்தக மையத்தில் இருந்து கொழும்பு – 07 இல் உள்ள விளையாட்டு அமைச்சின் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் செலவீனத்தை குறைக்கும் நோக்கில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இராஜாங்க அமைச்சர், விளையாட்டு அமைச்சின் காரியாலயத்தில் இருந்து தமது கடமைகளை திறம்பட மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தமது கடமைகளை சுற்றுலாத்துறை அமைச்சில் இருந்து முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடமாற்றத்தின் மூலம் வருடாந்தம் சேமிக்கப்படும் சுமார் 50 மில்லியன் ரூபாவை விளையாட்டு மேம்பாட்டு நிதிக்கு ஒதுக்குமாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



