தேசபந்துதென்னக்கோனின் நியமனத்திற்கு கத்தோலிக்க திருச்சபை கடும் கண்டனம்!

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்துதென்னக்கோனை ஜனாதிபதி நியமித்துள்ளதை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் செயல் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை கண்டித்துள்ளது.
அருட்தந்தை சிறில்காமினி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த நியமனத்தை கர்தினால் மல்கம் ரஞ்சித் கண்டித்துள்ளார்,அதேவேளை நாங்களும் இதனை கடுமையாக எதிர்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நியமனத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் செயல் என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் பதவிக்கு எவருடைய பெயரையாவது பரிந்துரைக்க விரும்புகின்றீர்களா என்ற கேள்விக்கு எங்களிடம் பெயர்கள் எவையும் இல்லை அரசமைப்பு பேரவைக்கு ஜனாதிபதியே நியமனங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் அருட்தந்தை சிறில்காமினி தெரிவித்துள்ளார்.
புதிய பதில்பொலிஸ்மா அதிபர் நியமனத்தின் பின்னர் பொலிஸாரினால் தங்களின் ஒழுக்கத்தை பேணமுடியுமா என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



