சிங்கபுர பகுதியில் ஏற்பட்ட பாரிய விபத்து - பலர் ஆபத்தான நிலையில்!
#SriLanka
#Police
#Accident
#Investigation
PriyaRam
1 year ago

வெலிகந்த – சிங்கபுர பகுதியில் இன்று பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரிசி ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை காயமடைந்தவர்கள் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் சிலர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வெலிகந்த சிங்கபுர வீதியில் 8 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து சாரதிக்கு பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 75 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



