சுகாதார சீர்கேடு - யாழில் சீல் வைக்கப்பட்டது உணவகம்

#SriLanka #Jaffna
PriyaRam
2 years ago
சுகாதார சீர்கேடு - யாழில் சீல் வைக்கப்பட்டது உணவகம்

கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாண மாநகர சபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசன் தலைமையிலான குழுவினரால் கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள உணவகம் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, பல சுகாதார சீர்கேட்டு குறைபாடுகள் இனங்காணப்பட்டன. ஏற்கனவே, பல தடவைகள் அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சுகாதார சீர்கேட்டுடனேயே குறித்த உணவகம் இயங்கி வந்தமை அவதானிக்கப்பட்டது.

images/content-image/2023/11/1701326917.jpg

அத்துடன், உணவகத்தில் திகதி காலாவதியான உணவு பொருட்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, உணவக உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் நேற்று பொது சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசனால் சுகாதார சீர்கேடு, காலாவதியான உணவு பொருட்கள் வைத்திருந்தமை என்பவற்றிற்கு தனித்தனியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்குகளை விசாரித்த நீதவான் குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகத்தினை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளை பிறப்பித்தார்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசனினால் உணவகம் சீல் வைத்து மூடப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4