ஊடக அடக்கு முறைக்கு எதிரான பாரிய போராட்டத்திற்கு அழைப்பு!

#SriLanka #NorthernProvince #Vavuniya #Protest #Media #journalists
PriyaRam
1 year ago
ஊடக அடக்கு முறைக்கு எதிரான பாரிய போராட்டத்திற்கு அழைப்பு!

ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் 2 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெறவுள்ளது.

இந்தப் போராட்டம் தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைகளும், அவர்களை அச்சுறுத்தி பழிவாங்கும் செயற்பாடுகளும் தொடர்ந்தும் இடம்பெற்று கொண்டிருக்கின்றன.

இதற்கு உடந்தையாக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு துறையினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே, வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

images/content-image/2023/11/1701332101.jpg

வவுனியாவில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளரும் ஊடக அமையத்தின் தலைவருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் மீது பொலிஸார் பொய் வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறான அடக்கு முறைகளுக்கு எதிராக ஒன்றிணைய அனைவரையும் அழைக்கின்றோம்.

 ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்துமாறு” ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!