தனியாருக்கு விற்கப்படவுள்ள நுவரெலியா அஞ்சலகம் - எதிர்ப்புப் போராட்டம்!
#SriLanka
#Protest
#NuwaraEliya
PriyaRam
1 year ago
நுவரெலியாவில் உள்ள அஞ்சலகத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா அஞ்சலகத்துக்கு முன்பாக இன்றைய தினமும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அஞ்சலக உத்தியோகத்தர்களால் மதியநேர உணவு இடைவேளையின் போது இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கறுப்பு நிற கொடிகளை ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது எதிர் வருகின்ற 2024ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் இருபதாயிரம் ரூபா சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரியும், வாழ்க்கைச் செலவை குறைத்திடு, மக்களுக்கு நிவாரணம் வழங்கு, மின்சாரக் கட்டணத்தை குறைத்திடு என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.