நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே வழிப்பாடு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இன்று (30.11) யாழ்.தீவு பகுதிகளுக்கான விஐயத்தின்போது நயினா தீவுக்கு சென்றுள்ளார்.
அங்கு நாகபூசணி அம்மன் ஆலயம், மற்றும் நாக விகாரை ஆகியவற்றில் வழிபாடு நடத்தியுள்ளார்.
இதன்போது உயர்ஸ்தானிகருக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து நாக விகாரை விகாராதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நயினாதீவில் மீள் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி திட்டங்களை அமுல் செய்வது குறித்தும் அதன் அவசியம் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.
இதேவேளை இந்திய உயர்ஸ்தானிகர் யாழ்.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



