உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறுவதை குற்றமாக்குவதற்கு இலங்கை பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்துகிறது - பேர்ள் அமைப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறுவதை குற்றமாக்குவதற்கு இலங்கை பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்துகிறது - பேர்ள் அமைப்பு!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைகூருவதை குற்றமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவது குறித்து இலங்கையின்  சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் கரிசனை வெளியிட்டுள்ளது.  

இது குறித்து குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில்,  தமிழர்களிற்கு எதிராக பாதுகாப்புபடையினரின் நடவடிக்கைகள் முன்னைய அரசாங்கங்கள் போல தற்போதைய அரசாங்கமும் சிங்கள பௌத்த பேரினவாத கொள்கைகளை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதை புலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

அத்துடனத் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கம் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதையும் இலங்கையில் தமிழர்களின் குரல்களை ஒடுக்க முயல்வதையும் கண்டிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 

குறிப்பாக அவர்கள் இந்த கடினமான தருணங்களில் தங்களின் நேசத்திற்குரியவர்களை நினைகூரும் இந்த தருணத்தில் இலங்கை அரசாங்கம் மேற்படி தமிழர்களின் குரல்களை ஒடுக்க முயல்வதை சர்வதேச கண்டிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!