ரொஷான் ரணசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்!

#SriLanka #Court Order
PriyaRam
1 year ago
ரொஷான் ரணசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்!

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து ஒன்றின் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

images/content-image/2023/11/1701347420.jpg

இந்த மனு தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதி ரொஷான் ரணசிங்கவிற்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இந்த மனுவை ஜனவரி 03ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்ததாக குறித்த சட்டத்தரணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!