யாழ் போதனா வைத்தியசாலையில் கை தொலைபேசிகளை திருடிய இருவர் கைது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் மதுரபெரும தலைமையிலான அணியினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஒருவரும் திருட்டு தொலைபேசியினை வாங்கிய குற்றச்சாட்டில் ஊர்காவற்துறைபகுதியைச் சேர்ந்த ஒருவரையும் யாழ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொலைபேசிகளை யாராவது தொலைத்திருந்தால் அவர்களை நேரடியாக வந்து உரிய ஆவணங்களை ஆதாரங்களை காட்டிதிருடப்பட்ட தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என குற்றத்தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.



