பிறந்த 2023 பங்குனி மாத முதல் நாளிற்கான ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
5 months ago
பிறந்த 2023 பங்குனி மாத முதல் நாளிற்கான ராசிபலன்

மேஷம்

அசுவினி : உங்கள் முயற்சி வெற்றியாகும், நினைத்ததை நிறைவேற்றுவீர். எதிர்பார்த்த வருவாய் வரும். பரணி : உங்கள் செயலில் விவேகம் இருக்கும், சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். முயற்சியில் வெற்றி காண்பீர். கார்த்திகை 1 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். சகோதரர்களின் ஆதரவு நன்மையை உண்டாக்கும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர். உங்கள் செயல்களில் வேகம் அதிகரிக்கும். ரோகிணி: வியாபாரத்தில் திருப்பம் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவு செலவில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உங்களைத்தேடி வருவர், தடைபட்ட வருவாய் வரும். கடன்களை அடைப்பீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: மதியம் வரை உங்கள் முயற்சி இழுபறியாகும். செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். திருவாதிரை: நெருக்கடிகளால் மனதில் குழப்பம் உண்டானாலும் நண்பர்கள் உதவியுடன் பிரச்னைக்கு தீர்வு காண்பீர். புனர்பூசம் 1,2,3: குழப்பம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.

கடகம்

புனர்பூசம் 4: காலையில் உறவினர்களால் சில சங்கடங்களுக்கு ஆளாவீர். மதியத்திற்கு மேல் விருப்பம் நிறைவேறும். பூசம்: மதியம் வரை அலைச்சல் அதிகரிக்கும், செலவு தேடிவரும், வியாபாரத்தில் பிரச்னை தோன்றி மறையும். ஆயில்யம்: வருமானம் அதிகரிக்கும்.ஒரு சிலர் புதிய இடம் வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்.

சிம்மம்

மகம்: மதியம் வரை உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூரம்: விஐபிகள் ஆதரவுடன் உங்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர். மதியத்திற்கு மேல் எதிர்பாராத செலவு ஏற்படும். உத்திரம் 1: தடைபட்டிருந்த செயல் நிறைவேறும். வராமல் இருந்த பணம் வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவுடன் ஒரு முயற்சி நிறைவேறும். அஸ்தம்: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கூட்டுத் தொழிலில் பொருளாதார நிலை உயரும். சித்திரை 1,2: துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்த்த வருவாய் வரும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உறவினர்களால் நன்மை உண்டாகும். சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும், எண்ணம் நிறைவேறும். விசாகம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: பழைய பிரச்னை ஒன்று முடியும். மனதில் இருந்த பயம் நீங்கும். மற்றவரிடம் வாக்கு வாதம் வேண்டாம். அனுஷம்: நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். பெரியோர் வழிகாட்டுதலால் முயற்சி நிறைவேறும். கேட்டை: பயணத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். எதிர்ப்பு அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: மதியம் வரை உற்சாகத்துடன் செயல்படுவீர். சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம். பூராடம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும், குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். உத்திராடம் 1: அரசு வழி முயற்சி ஆதாயமாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். உறவினர் ஆதரவு உண்டாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: மறைமுகத் தொல்லை நீங்கும், குடும்பத்திற்கு வரும் பணவரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவோணம்: உங்களுடைய நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். எண்ணம் நிறைவேறும். போட்டியாளர் விலகுவர். அவிட்டம் 1,2: வெளி வட்டாரத்தில் நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும், குடும்பத்தில் பணவரவு மகிழ்ச்சி தரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர். அஷ்டம கேதுவால் உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். சதயம்: உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை விலகும். நண்பர்களுடன் இணைந்து புதிய முயற்சியில் ஈடுபடுவீர். பூரட்டாதி 1,2,3: உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரித்தாலும் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் உண்டான பிரச்னை தீரும். உத்திரட்டாதி: உங்கள் விருப்பம் நிறைவேறும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.பிள்ளைகளால் நன்மை உண்டு. ரேவதி: வியாபாரத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.லாபம் அதிகரிக்கும்.