லாப ஸ்தான சந்திரனால் நெருக்கடிகளில் இருந்து விடுபடும் கன்னி ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
5 months ago
லாப ஸ்தான சந்திரனால் நெருக்கடிகளில் இருந்து விடுபடும் கன்னி ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: தடைபட்டிருந்த செயல் நிறைவேறும். வரவு அதிகரிக்கும். அரசாங்க விவகாரங்களில் கவனம் அவசியம். பரணி: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகுவர். கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் திட்டமிட்ட வேலை எளிதாக நடக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். நண்பர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நினைத்ததை சாதிப்பீர். ரோகிணி: உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவர். மிருகசீரிடம் 1,2: யோசித்து நினைத்ததை சாதிப்பீர். புதிய முயற்சி பலிக்கும். கொடுத்த வாக்குறுதி நிறைவேறும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வரவு செலவில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். திருவாதிரை: எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புனர்பூசம் 1,2,3: பணத்தைக் கையாளுவதில் கவனம் தேவை. இன்று அடுத்தவரை நம்பி ஏமாற வேண்டாம்.

கடகம்

புனர்பூசம் 4: எந்த ஒன்றிலும் அவசரம் வேண்டாம். அமைதியாக செயல்படுங்கள்.எண்ணம் நிறைவேறும். பூசம்: செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஆயில்யம்: முயற்சியில் தடை ஏற்படும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.

சிம்மம்

மகம்: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். பண வரவிற்காக மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். பூரம்: குடும்பத்தினரால் சில நெருக்கடிகளுக்கு ஆளாவீர். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. உத்திரம் 1: வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடப்படுவீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வரும். புதிய முயற்சி முன்னேற்றம் தரும். அஸ்தம்: லாப ஸ்தான சந்திரனால் நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர். பொருளாதார நிலை உயரும். சித்திரை 1,2: வியாபார விருத்திக்காக புதிய முயற்சி மேற்கொள்வீர். அரசு வழியில் எதிர்பார்த்த லாபம் அடைவீர். 

துலாம்

சித்திரை 3,4: எதிர்பார்த்த தகவல் வரும். சுறு சுறுப்பாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். சுவாதி: பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னை விலகும் என்றாலும், மற்றவரை அனுசரித்துச் செல்வது நல்லது. விசாகம் 1,2,3: உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கமான செயல் லாபமாகும். நிதிநிலை உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். அனுஷம்: நண்பர்கள் ஆதரவால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த வருவாய் வரும். கேட்டை: பெரியோர் ஆதரவுடன் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் எளிதாக பூர்த்தியாகும். 

தனுசு

மூலம்: அலைச்சல் அதிகரிக்கும், உங்கள் முயற்சி இழுபறியாகும், செயல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். பூராடம்: எதிர்பார்ப்பு இழுபறியாகும். வியாபார போட்டியாளர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். உத்திராடம் 1: உங்கள் முயற்சி நிறைவேற கடுமையாக உழைப்பீர். நெருக்கடிகளில் இருந்து வெளியில் வருவீர். 

மகரம்

உத்திராடம் 2,3,4: குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர். திருவோணம்: நண்பர்கள் வழியே நன்மை ஏற்படும். நேற்றைய முயற்சி நிறைவேறும். பொருளாதார சிக்கல் நீங்கும். அவிட்டம் 1,2: எதிர்பார்த்த செய்தி வரும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர். வெளியூர் பயணம் ஆதாயமாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும், எதிர்ப்பு விலகும்.துணிச்சலுடன் செயல்பட்டு செயலில் லாபம் காண்பீர். சதயம்: கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சி நிறைவேறும். குழப்பம் நீங்கும். பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த வரவு வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.

மீனம்

பூரட்டாதி 4: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும், ஒரு சிலர் புதிய சொத்துக்களை சேர்ப்பீர்கள். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். ரேவதி: வெளிவட்டாரத்தில் உங்கள் குடும்ப வளர்ச்சியை பார்த்து பலரும் பாராட்டுவர். செல்வாக்கு உயரும் நாள்.