போதைப் பொருள் பாவனையால் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளர்கள்!

#SriLanka #Jaffna #drugs
PriyaRam
2 years ago
போதைப் பொருள் பாவனையால் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளர்கள்!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையால் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம் என வடபிராந்திய பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை நிலைய வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. றொகான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

“ஒவ்வொரு ஆண்டும் எயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாகக் கூடிக் கொண்டே போகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்போது பெருமளவான போதைப்பொருள் பாவனையாளர்கள் இரத்த நாளங்களின் ஊடாக உடலில் போதைப்பொருளை ஏற்றிக்கொள்கின்றார்கள். 

images/content-image/2023/12/1701503620.jpg

தனால் எயிட்ஸ் போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. சாதாரண ஒரு ஸ்ரிஞ் மூலம் ஒரு ஊசியை பலர் பாவிப்பதால் ஒருவருக்கு எயிட்ஸ் தொற்று இருந்தால், அதனை பாவிக்கும் மற்றவருக்கும் தொற்றக்கூடிய சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகின்றது.

இலங்கையில் தற்போது 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதிலே வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 90 பேர் இன்று வரைக்கும் எச்ஐவி தொற்று உள்ளவர்கள் என இனங்காணப்பட்டுள்ளார்கள்.

அதில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சுமார் 65 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4