பிரபல கிரிக்கெட் வீரரின் உணவகத்தில் தமிழருக்கு அனுமதி மறுப்பு(காணொளி)

மும்மையில் அமைந்துள்ள விராட் கோலியின் உணவகத்திற்கு வேஷ்டி அணிந்து வந்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தமிழர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு தமிழர்கள் பலரும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் விராட் கோலி. சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரிலும் சிறப்பாக விளையாடிமைக்காக விராட் கோலி தொடர் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.
விராட் கோலி சமீபத்தில் மும்பையில் உள்ள ஜூஹூவில் ஒரு ஆடம்பரமான உணவகத்தைத் திறந்தார்.
இந்த உணவகத்திற்கு One 8 என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உணவகம் உள்ளூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமானதாக விரைவில் மாறியுள்ளது.
இந்நிலையில், இந்த உணவகத்திற்குச் சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.




Person with Veshti was not allowed in @imVkohli 's Restaurant
— உன்னைப்போல் ஒருவன் (@Sandy_Offfl) December 2, 2023
Very nice da👌 pic.twitter.com/oTNGVqzaIz