உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய மீன ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
5 months ago
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய மீன ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மற்றவரால் திடீர் பயணம் ஏற்படும்.அலைச்சல் அதிகரிக்கும். பரணி: உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். கார்த்திகை 1: தாய்வழி உறவினர்களால் சில நெருக்கடிகளை சந்திப்பார்கள். வெளியூர் பயணம் லாபம் தரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: துணிவுடன் செயல்படுவீர். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர். ரோகிணி: உறவினர்கள் வீடு தேடி வருவர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவலும் பணமும் வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். நிதிநிலை உயரும். புதிய பொருள் சேரும். திருவாதிரை: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.செல்வாக்கு அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். பழைய பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்.

கடகம்

புனர்பூசம் 4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். கவனக் குறைவால் செயலில் தடுமாற்றம் ஏற்படும்.நிதானம் அவசியம். பூசம்: வேலை பளு அதிகரிக்கும். உங்களையும் அறியாமல் தடுமாற்றத்திற்கு ஆளாவீர். விழிப்புணர்வு தேவை. ஆயில்யம்: அலைச்சல் அதிகரிக்கும்.கவனமுடன் செயல்படுவதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும்.

சிம்மம்

மகம்: எதிர்பாராத செலவு தோன்றும். பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. புதிய முயற்சி இன்று வேண்டாம். பூரம் : விழிப்புடன் செயல்படுவதால் விரயங்களைத் தவிர்க்கலாம். குடும்பத்தினரால் நெருக்கடிக்கு ஆளாவீர். உத்திரம் 1: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று வரும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர். அஸ்தம்: கடனாக கொடுத்த பணம் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். நிம்மதியான சூழல் உண்டாகும். சித்திரை 1,2: சிந்தித்து செயல்படுவீர். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வருவாய் அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4 : வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த வருவாய் உண்டாகும். சுவாதி : நண்பர்கள் வழியே வாய்ப்பு வரும். எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விசாகம் 1,2,3 : உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். மற்றவருடன் அனுசரித்துச் சென்று நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் முயற்சியால் நீங்கள் மேற்கொள்ளும் செயலில் ஆதாயம் காண்பீர். பகை உங்களை விட்டு விலகும். அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த அனுகூலம் உண்டு. கேட்டை : இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். உங்கள் திறமை வெளிப்படும். வழிபாட்டில் பங்கேற்பீர்.

தனுசு

மூலம் : நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். முயற்சிகளில் ஏற்பட்ட தடை அகலும். துணிச்சலுடன் செயல்பட்டுவீர். பூராடம்: உதவி செய்வதாக சொன்னவர் கடைசி நேரத்தில் காணாமல் போவர். கவனமுடன் செயல்படுவீர்கள். உத்திராடம் 1 : வியாபாரத்தில் போட்டியாளர்களால் பிரச்னை தோன்றும். உறவினர் சூழல் அறிந்து உதவு செய்வீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : நண்பர்களால் உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். திருவோணம் : குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். அவிட்டம் 1,2 : உங்கள் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினர் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்.

கும்பம்

அவிட்டம் 3,4 : உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகுவார்கள். சதயம் : போட்டியாளர்களால் உண்டான பிரச்னைக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உண்டான சங்கடம் நீங்கும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் உண்டான தடை விலகும். புதிய வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4 : உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். உறவினர் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர். உத்திரட்டாதி : குடும்பத்தில் உண்டான பிரச்னை முடியும். புதிய முயற்சி லாபம் தரும். எண்ணம் நிறைவேறும். ரேவதி : வரவேண்டிய பணம் வரும். தடைபட்டிருந்த வேலை நடக்கும். உறவினருக்கு உதவி செய்வீர்கள்.