மைச்சாங் புயல் இன்று இலங்கையை விட்டு நகரும் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மைச்சாங் புயல் இன்று இலங்கையை விட்டு நகரும் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைக்கொண்டிருந்த "மைச்சாங்" சூறாவளியானது இன்று (04.12) இலங்கையை விட்டு நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மை

குறித்த புயலானது  நாளை (05) வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதன் காரணமாக மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அந்த பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மற்ற பகுதிகளில் பிற்பகல் சுமார் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.  

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4