ஆசியாவின் முக்கியமான துறைமுகமாக மாறவுள்ள கிழக்கு கொள்கலன் முனையம்!

#SriLanka #Colombo
PriyaRam
2 years ago
ஆசியாவின் முக்கியமான துறைமுகமாக மாறவுள்ள கிழக்கு கொள்கலன் முனையம்!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் நிர்மாணப்பணிகள் அடுத்த வருட நடுப்பகுதியில் நிறைவடையும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த டெர்மினலுக்காக மூன்று மெகா கப்பல்கள் ஒரே நேரத்தில் நிறுத்தப்படும் வகையில் 1,400 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் இறங்குதுறை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

images/content-image/2023/12/1701665459.jpg

இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த முனையத்தின் அபிவிருத்திக்காக மொத்தம் 585 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிற்கு அதிகமான கப்பல்களை ஈர்க்கும் வகையிலும் ஆசியாவின் முக்கிய துறைமுகமாக இதனை மாற்றவும் விரும்புவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4