இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த புயலானது இன்று (05.12) காலை 11.30 மணியளவில் வடக்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மற்ற பகுதிகளில் பிற்பகல் சுமார் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4