யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற வாள்வெட்டு - ஆரம்பமானது தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன், தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில், நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், இந்த சம்பவத்தின் போது, துப்பாக்கி பிரயோகமும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வான் ஒன்றில் சென்ற குழுவொன்று குறித்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
காயமடைந்தவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



