திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் தனுசு ராசிக்காரர்கள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
5 months ago
திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் தனுசு ராசிக்காரர்கள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்களின் நேற்றைய முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த பணம் வரும். வழக்கு சாதகமாகும். பரணி: குடும்பத்தில் உண்டான பிரச்னை விலகும். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும். வருமானம் உயரும். கார்த்திகை 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர். செல்வாக்கு உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட தொல்லை விலகும். ரோகிணி: வருவாயில் இருந்த தடை நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். மிருகசீரிடம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். தாய் வழி உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : அரசு வழி முயற்சி ஆதாயமாகும். தடைகளை சரி செய்து வெற்றி அடைவீர். லாபம் உண்டாகும். திருவாதிரை: தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர். புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்து கொள்வீர்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வர வேண்டிய பணம் வரும். பூசம்: குடும்பத்தினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வரவினால் கடன் அடைப்பீர்கள். ஆயில்யம்: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். நண்பர்களால் செயல்வெற்றியாகும்.

சிம்மம்

மகம்: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படும் செயல் வெற்றியாகும். பூரம்: வேலை பளு அதிகரிக்கும். பணி புரியும் இடத்தில் நெருக்கடி உண்டாகும்.விழிப்புடன் செயல்படுவது நல்லது. உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். சிக்கல் வரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சி இழுபறியாகும். செயல்களில் குழப்பம் உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் அடைய முடியாமல் போகும். சித்திரை 1,2: காலையில் வியாபாரத்தில் நெருக்கடி இருக்கும்.குடும்பத்திலுள்ள வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை.

துலாம்

சித்திரை 3,4: செலவு அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். சுவாதி: குரு பகவான் வக்கிரமடைந்திருப்பதால் செயல்களில் கவனம் அவசியம். உங்கள் முயற்சி ஒன்று இழுபறியாகும். விசாகம் 1,2,3: வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். செயல்களில் சிரமம் உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். நீண்டநாள் முயற்சியில் இன்று ஆதாயம் காண்பீர்கள். அனுஷம்: தொழிலில் இருந்த சங்கடம் நீங்கி பொருளாதாரம் கூடும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்டை: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பழைய கடன் ஒன்றை அடைப்பீர். இழுபறியாக இருந்த வழக்கு முடியும்.

தனுசு

மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பூராடம்: பெரியோரின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உத்திராடம் 1: குடும்ப நெருக்கடி விலகும். இத்தனை நாளும் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் திருந்துவார்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நீண்ட நாள் பிரச்னைக்கு முடிவு ஏற்படும். செயல்களில் உண்டான நெருக்கடி நீங்கும். திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். அவிட்டம் 1,2: அலைச்சல் அதிகரிக்கும். வீண் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். செயல்களில் பொறுமை தேவை.

கும்பம்

அவிட்டம் 3,4: நீண்டநாள் பிரச்னை ஒன்று மீண்டும் தோன்றும். மனதில் இனம் புரியாத அச்சம் ஏற்படும். சதயம்: உழைப்பு அதிகரிக்கும். சில தடைகளை சந்தித்தாலும் உங்கள் திறமையால் எண்ணியதை அடைவீர். பூரட்டாதி 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பிறர் கொடுத்த நெருக்கடி நீங்கும்.

மீனம்:

பூரட்டாதி 4: நீண்ட நாட்களாக இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். உத்திரட்டாதி: அலுவலகப் பணியில் சில சங்கடம் உண்டாகும். ஜென்ம ராகுவால் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். ரேவதி: தம்பதிகளுக்குள் சில பிரச்னை உண்டாகும். உடல்நிலையில் சில சங்கடம் தோன்றி மறையும்.