இறக்கும் முன் தனக்கு தானே கல்லறையை கட்டிக்கொண்ட நடிகை ரேகா - உங்களால் முடியுமா?

#India #Cinema #Actress #TamilCinema #Tamil #tomb
Prasu
2 years ago
இறக்கும் முன் தனக்கு தானே கல்லறையை கட்டிக்கொண்ட நடிகை ரேகா - உங்களால் முடியுமா?

நடிகை ரேகா, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ரேகா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

அதன்பிறகு, அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இன்றைய தலைமுறையினரிடம் பிரபலமானார். 

images/content-image/1701888228.jpg

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இவரின் தந்தை மரணம் அடைந்தார். தந்தையின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த ரேகாவால் அவரின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, கேரளாவில் தன் தந்தையின் கல்லறைக்கு அருகில் உயிரோடு உள்ள தனக்கும் கல்லறை கட்டி விட்டார்.

தான் இறந்த பிறகு தன்னை தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் இறந்த பின்பாவது அப்பாவுடன் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்றும் கூறியிருக்கிறார். 

ஆனால் உயிரோடு இருந்து கொண்டே தனக்கே கல்லறை கட்டிய ரேகாவை, இதெல்லாம் ரொம்ப ஓவருங்க என்று சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4