மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு: சென்னையை விட்டு வெளியேறும் மக்கள்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யும். சில இடங்களில் மழை காரணமாக தண்ணீர் தேங்கும்.
சாலைகள் வழுக்கும் தன்மையுடன் இருக்கலாம். சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உள்ளது. பழைய, பழுதான கட்டிடங்கள் சேதமடையும் அபாயம் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது." என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக வெளியான அறிவிப்பில், "நேற்று (05-12-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்' தீவிர புயல்' தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே நண்பகல் 12.30 -14.30 மணி அளவில் கடந்தது.
06.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.