நிதி நிலை உயர கூடிய மூன்று ராசியினர் , அதிலும் விருச்சிக ராசிக்காரர்கள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
11 months ago
நிதி நிலை உயர கூடிய மூன்று ராசியினர் , அதிலும் விருச்சிக ராசிக்காரர்கள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு அதில் வெற்றி பெறுவீர். வருமானம் அதிகரிக்கும். பரணி : உறவினர்கள் ஆதரவால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்சினைகள் தீரும். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் செயலில் சாதகமான நிலை உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ரோகிணி: உங்கள் புத்தி சாதுர்யம் வெளிப்படும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். மிருகசீரிடம் 1,2: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். சொத்து விவகாரத்தை பேசி தீர்ப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வெளி இடத்தில் இருந்து வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவாதிரை: நண்பர்கள் உதவியுடன் ஒரு காரியத்தை செய்து முடிப்பீர். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவுறும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். தாய்வழி உறவினர்களால் லாபம் அதிகரிக்கும். 

கடகம்

புனர்பூசம் 4: பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு உதவி புரிவார்கள். பூசம்: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். நீங்கள் ஈடுபடும் செயல் இன்று வெற்றியாகும். ஆயில்யம்: துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். எதிர்பாராத வந்த சங்கடம் நீங்கும். 

சிம்மம்

மகம்: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பூரம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வர வேண்டிய பணம் வசூலாகும். குடும்பத்திற்காக செலவு செய்வீர். உத்திரம் 1: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். முயற்சியால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4: நன்றாக யோசிக்காமல் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். அமைதி காப்பது நலம். அஸ்தம்: தேவையில்லாத பிரச்னை உங்களைத்தேடி வரும். மற்றவரை நம்பி செயல்களை ஒப்படைக்க வேண்டாம். சித்திரை 1,2: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் எண்ணம் நிறைவேறும். 

துலாம்

சித்திரை 3,4: பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர். திட்டமிட்ட செயல் இழுபறியாகும். பயணத்தில் கவனம் தேவை. சுவாதி: அடுத்தவரிடம் வீண் விவாதம் வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும். பொறுமை காப்பது அவசியம். விசாகம் 1,2,3: திடீர் செலவு தோன்றும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்.வார்த்தைகளில் நிதானம் தேவை. 

விருச்சிகம்

விசாகம் 4: உறவினர்கள் உங்களைத் தேடி வருவர். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நிதிநிலை உயரும். அனுஷம்: இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். கேட்டை: பிரச்னைகளை சமாளித்து எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். 

தனுசு

மூலம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். எதிர்பார்த்த வருவாய் உண்டு. பொருளாதார நிலை உயரும். பூராடம்: புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உண்டாகும். அதற்காக நண்பர்களிடம் யோசனை கேட்பீர். உத்திராடம் 1: மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை முடித்துக் காட்டுவீர். பண வரவு திருப்தி தரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: தந்தையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். பெரியோரின் ஆதரவு அதிமாகும். எதிர்பார்த்த வருமானம்வரும். திருவோணம்: புதிய முயற்சி நன்மை தரும். எதிர்பார்த்தவற்றில் அனுகூல நிலை ஏற்படும். வழிபாட்டில் பங்கேற்பீர். அவிட்டம் 1,2: உங்கள் அணுகுமுறையால் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். 

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் வார்த்தையிலும் செயல்களிலும் நிதானம் தேவை பிறரால் சங்கடங்களை சந்திப்பீர்கள். சதயம்: எதிர்பாராத சங்கடம் தோன்றினாலும் அதை சமாளிப்பீர். வருமானம் அதிகரிக்கும். எண்ணம் நிறைவேறும் பூரட்டாதி 1,2,3: மற்றவரிடம் வீண் விவாதம் வேண்டாம் அதனால் உங்கள் மரியாதைக்கு பாதகம் ஏற்படும். 

மீனம்

பூரட்டாதி 4: அலுவலகத்தில் திடீரென நெருக்கடி தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். உத்திரட்டாதி : குடும்பத்தில் சலசலப்பு தோன்றும். அக்கம் பக்கத்தினருடன் சண்டை சச்சரவு என்ற நிலை உண்டாகும். ரேவதி: நண்பர்கள் உதவியால் உங்கள் செயலில் ஆதாயம் காண்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!