தமிழகத்திற்கு அடுத்த மூன்று நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான MICHAUNG சூறாவளியினால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. 48 மணி நேரத்தில் சுமார் 44 சென்டிமீட்டர் மழை பெய்ததால் சென்னை முழுவதும் நீரில் மூழ்கியது.
இந்த நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், கோவை மற்றும் நீலகிரியை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் 10 ஆம் திகதி மற்றும் 11 ஆம் திகதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.