விருச்சிக ராசிக்காரர்களுக்கு வார்த்தைகளில் கவனம் தேவை - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
4 months ago
விருச்சிக ராசிக்காரர்களுக்கு வார்த்தைகளில் கவனம் தேவை - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் செயல் முன்னேற்றம் அடையும். நெருக்கடி நீங்கும். உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பரணி: நீங்கள் எதிர்பார்த்த ஒரு செய்தி வரும். நண்பர்கள் உங்கள் முயற்சிக்கு துணையாக இருப்பார்கள். கார்த்திகை 1: நினைத்ததை சாதித்து முடித்து மகிழ்வீர்கள். புதிய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வரவு வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நேற்றிருந்த சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த ஆதாயம் வரும் எதிரிகள் தொல்லை நீங்கும். ரோகிணி: தடைகளை எல்லாம் சரி செய்வீர். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மிருகசீரிடம் 1,2: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகி சுறு சுறுப்பாக செயல்படுவீர். முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். அதற்கேற்ற வரவு ஏற்படும். புதிய முயற்சி பலிதமாகும். திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வரும். சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர். புனர்பூசம் 1,2,3: பிரச்னை முடிவிற்கு வரும். சொத்து வகையிலான சிக்கல் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். அலைச்சல் அதிகரித்தாலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பூசம்: நெருக்கடிகளை சமாளித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஆயில்யம்: தாய்வழி உறவினரிடம் உண்டான சங்கடம் விலகும். எதிர்பார்த்த வரவு வரும். 

சிம்மம்

மகம்: செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். சகோதரர்களால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூரம்: பழைய பிரச்னைகளை சரி செய்வீர். புதிய முயற்சியில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். உத்திரம் 1: உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் ஈடுபடும் செயல் லாபமாகும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். 

கன்னி

உத்திரம் 2,3,4: வரவிற்கான தடை அகலும். குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அஸ்தம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வரவு அதிகரிக்கும். சித்திரை 1,2: ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும். நிதி நிலை உயரும். கடன்களை அடைப்பீர்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி: குடும்ப நலனுக்காக ஒரு முடிவை துணிச்சலுடன் மேற்கொள்வீர். வருமானம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வரும். 

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பாராத செலவுகளும் அலைச்சலும் உண்டாகும். எதிரிகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். அனுஷம்: வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. கேட்டை: எதிர்ப்பு விலகும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். திடீர் செலவுகளை சந்திப்பீர்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நிதி நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பூராடம்: திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர். எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். உத்திராடம் 1: வரவு அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். நவீன பொருட்கள் வாங்குவீர். 

மகரம்

உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்து லாபம் காண்பீர்கள். திருவோணம்: போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த செயலில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். 

கும்பம்

அவிட்டம் 3,4: நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சி இன்று நிறைவேறும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சதயம்: நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும். தந்தை வழியில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நிதிநிலை உயரும். பூரட்டாதி 1,2,3: நிறைவேறாது என்று நீங்கள் நினைத்திருந்த முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். 

மீனம்

பூரட்டாதி 4: நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் தடை உண்டாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. உத்திரட்டாதி: தேவையற்ற பிரச்னைகளால் சங்கடம் அதிகரிக்கும். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். ரேவதி: உங்கள் முயற்சிக்கேற்ற பலன் உண்டாகும். அடுத்தவரை நம்பி எந்தவொரு காரியத்திலும் ஈடுபடாதீர்.